மருத்துவ காப்பீட்டை மனநல மருத்துவ சிகிச்சைக்கும் ஏன் நீட்டிக்கக் கூடாது? உச்சநீதிமன்றம்

 

மருத்துவ காப்பீட்டை மனநல மருத்துவ சிகிச்சைக்கும் ஏன் நீட்டிக்கக் கூடாது? உச்சநீதிமன்றம்

மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை ஏன் தங்குவது இல்லை என பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை நீட்டிக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி கெளரவ் குமார் பல்சால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன நோய் தொடர்பான சிகிச்சைக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே சட்டம் உள்ளது. ஆனால் அதனை காப்பீடு நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றும், மன நோய் சிகிச்சைக்கும் மருத்துவ காப்பீட்டை நீட்டிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மருத்துவ காப்பீட்டை மனநல மருத்துவ சிகிச்சைக்கும் ஏன் நீட்டிக்கக் கூடாது? உச்சநீதிமன்றம்

கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மனநல மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியதுடன், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் .