‘இன்னுமா நம்பறீங்க’ ட்ரம்ப்க்கு சப்போர்ட் பண்ணும் ஆதரவாளர்கள்

 

‘இன்னுமா நம்பறீங்க’ ட்ரம்ப்க்கு சப்போர்ட் பண்ணும் ஆதரவாளர்கள்

2020 ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாக அமெரிக்கத் தேர்தல் முடிவு இருந்தது. நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

‘இன்னுமா நம்பறீங்க’ ட்ரம்ப்க்கு சப்போர்ட் பண்ணும் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதனால், ட்ரம்ப் ஆதரவளார்கள் எப்படியாவது மீண்டும் ட்ரம்ப் அதிபராகி விடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம். அப்படித்தான் வாஷிங்டனில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும்போது, வான் வழியே ட்ரம்ப் சென்றதைப் பார்த்த ஆதரவாளர்கள் சந்தோஷமாக சத்தம் எழுப்பியிருக்கிறார்கள்.

‘இன்னுமா நம்பறீங்க’ ட்ரம்ப்க்கு சப்போர்ட் பண்ணும் ஆதரவாளர்கள்

ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் முறைப்படி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நிலையில் இவர்களின் செயல்களைப் பார்த்து ‘இன்னுமாய்யா ட்ரம்ப் அதிபராகிடுவார்னு நம்பறீங்கனு கலாய்த்து வருகிறார்கள்.