ஐ.பி.எஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன்! – குஜராத்தைக் கலக்கிய பெண் காவலர் உறுதி

 

ஐ.பி.எஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன்! – குஜராத்தைக் கலக்கிய பெண் காவலர் உறுதி

குஜராத் அமைச்சரின் மகனை நடுத்தெருவில் நிற்கவைத்து கேள்வி கேட்டதால் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்ட பெண் காவலர் சுனிதா யாதவ், தான் மீண்டும் ஐ.பி.எஸ் அதிகாரியாக வருவேன் என்று உறுதி ஏற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரிந்தவர்களைக் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினார். அப்போது தாங்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியும் அவர்களை அனுமதிக்கவில்லை.

ஐ.பி.எஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன்! – குஜராத்தைக் கலக்கிய பெண் காவலர் உறுதிஇதனால், சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி நேரடியாக அங்கு வந்தார். அப்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்படி வர உங்களுக்கு அனுமதி அளித்தது யார், நள்ளிரவில் ஊரடங்கு நேரத்தில் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என்று தைரியமாக கூறினார். தகராறு செய்த அமைச்சரின் மகனை அதிரடியாக கைதும் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
இதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த அன்றே அவர் வேறு இடத்துக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அன்றே அவர் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மிரட்டல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

ஐ.பி.எஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன்! – குஜராத்தைக் கலக்கிய பெண் காவலர் உறுதிராஜினாமா குறித்து சுனிதா யாதவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் எனது வேலையை ராஜினாமா செய்துள்ளேன். என் கடமையைச் செய்தேன். அமைச்சர் மகன் விதிமுறைகளை மீறியதால் கைது செய்தேன், ஆனால், உயர் அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, ஆதரிக்கவும் இல்லை. ஏராளமான மிரட்டல், அவதூறான பேச்சுக்களைக் கேட்க நேர்ந்தது. என்னுடைய பணியை சரியாக செய்ததற்குக் கிடைத்த பரிசு இது. நான் சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க உள்ளேன். விரைவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக வெற்றி பெற்று மீண்டும் வருவேன். ஒருவேளை என்னால் வெற்றி பெற முடியாவிட்டால் ஒரு வழக்கறிஞராக, பத்திரிகையாளராக என்னுடைய பணியை செய்வேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே சுனிதா யாதவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று சூரத் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அவர் மீது விசாரணை நடந்து வருவதால் தற்போது ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.