அஸ்வின் அதுக்கு சரிபட்டு வரமாட்டார் – சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேச்சு!

 

அஸ்வின் அதுக்கு சரிபட்டு வரமாட்டார் – சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேச்சு!

இந்திய அணியில் எப்படி புஜாராவை டெஸ்ட் போட்டிகளுக்காகவே நேர்ந்துவிட்டிருக்கிறதோ அதேபோன்று பவுலர்களில் அஸ்வினையும் இஷாந்த் சர்மாவையும் தேர்வுக்குழு டெஸ்டுக்காக நேர்ந்துவிட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்டவர்களில் மற்ற இருவரை விட நல்ல ஃபார்மில் இருப்பவர் அஸ்வின். லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அதனால் தான் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பும் அஸ்வின் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்படுகிறார்.

அவர் ஏலத்தில் வந்தாலும் அவரை எடுக்க அணிகள் போட்டி போட்டுக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியிருக்கும் அவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பிசிசிஐ தொடர்ந்து புறக்கணித்துவருகிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை அல்லது உள்ளே அரசியல் உள்ளதா என்பதும் விளங்கவில்லை. இதுதொடர்பாகப் பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இனி அஸ்வினை லிமிடெட் ஓவர் போட்டிகளில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்கிறார்.

Image result for ashwin

தொடர்ந்து அவர் பேசுகையில், “அஸ்வின் மீண்டும் ஒருநாள், டி20 அணிக்குள் திரும்புவார் என நான் எதிர்பார்க்க மாட்டேன். அதற்கான வாய்ப்பும் இல்லை. அவரது இடத்தை நிரப்புவதற்கு ஹர்திக் பாண்டியாவை இந்தியா தேடிவிட்டது. அதேபோல ஜடேஜாவும் இருக்கிறார். இப்படியிருக்கும் சூழலில் கூடுதல் ஸ்பின்னரை அணிக்குள் எடுக்க தேர்வுக்குழு விரும்பாது. அதேசமயம் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அஸ்வினுக்கு ஃபிட்னெஸ் இல்லை என்பதே என் கருத்து. ஆனால், நிச்சயமாக இன்னும் ஆறு வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக அஸ்வின் வலம் வருவார்” என்றார்.