65 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் தேர்தல்களில் தபால் முறையில் வாக்களிக்க அனுமதிக்ககோரி அரசிடம் பரிந்துரை…. தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்…

65 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் தேர்தல்களில் தபால் முறையில் வாக்களிக்க அனுமதிக்ககோரி அரசிடம் பரிந்துரை…. தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்…

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பரிவுகளான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேவையற்ற ஆபத்துக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாக தபால் வாக்குச்சீட்டுகள் உள்ளன. தபால் வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்துவதற்கான தகுதியை விரிவுப்படுத்துவதால் கூட்டத்தை குறைத்து தேர்தலை பாதுகாப்பாக நடத்த அஞ்சல் வாக்குகள் உதவும். 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களையும் அஞ்சல் முறை மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் தேர்தல்களில் தபால் முறையில் வாக்களிக்க அனுமதிக்ககோரி அரசிடம் பரிந்துரை…. தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்…

தொற்றுநோய் பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மற்றும் இந்த மாதம் நடைபெற இருந்த மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு மாநிலங்களில் நடத்த வேண்டிய இடைத்தேர்தல்களை நடத்துவது குறித்து சரியான நேரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தற்போதைக்கு பீகார் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பாக யோசனை செய்யவில்லை. தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தில் தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

65 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் தேர்தல்களில் தபால் முறையில் வாக்களிக்க அனுமதிக்ககோரி அரசிடம் பரிந்துரை…. தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்…

தபால் ஓட்டு அல்லது அஞ்சல் வாக்குச் சீட்டு என்பது வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய இயலாதவர்கள் அஞ்சல் வாக்குச சீட்டு மூலம் தேர்தல்களில் வாக்கு பதிவு செய்யும் முறையாகும். தேர்தல் நடத்தும் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் மற்றும் பணியில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் தபால் ஒட்டு வாயிலாக தேர்தல்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்வர். மேலும் கடந்த ஆண்டு முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளும் தபால் ஓட்டு வாயிலாக தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.