ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

 

ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பொழுது போக்கு.., வாய்க்கு ருசியான சாப்பாடு வேண்டும் நமக்கு. அதிலும் 1-ம் தேதி பக்கம் என்றால் கேட்கவே வேண்டாம். கையில் காசிருக்கும்,வித விதமாக சாப்பிடச் சொல்லும். அப்படி உற்சாகமாக சமைத்து, சாப்பிட்டு குடும்பத்தோடு கொண்டாட மட்டன் நல்லி பெப்பர் ப்ரை குழம்பும்… சிக்கன் கட்லெட் ரெசிப்பியும் உங்களுக்காக..

ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

தேவை:
ஆட்டுக்கறி 1/2 கிலோ,ந.எண்ணெய்- 200 மி.லி.,பூண்டு விழுது – 25 கிராம்,இஞ்சி விழுது – 25 கிராம்,வெங்காயம் – 100 கிராம்,மிளகு அரைத்தது – 20 கிராம்,பச்சை மிளகாய் – 3,கறிவேப்பிலை – 10 கிராம்,கொத்தமல்லி – தேவையான அளவு. உப்பு – தேவைக்கு.

செய்முறை:

முதலில் மட்டனை வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். உடன் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மட்டன் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். பிறகு மிளகுப்பொடியை மேலே தூவி வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

மட்டன் நல்லி ப்ரை

ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

தேவை:வேக வைத்த மட்டன் நல்லி – 200 கிராம்,சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது- தேவைக்கு,சிறிதளவு பட்டை, சோம்பு, சீரகம், க.எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்-தேவைக்கு,மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு- தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு நல்லி எலும்புகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும். சிறிது நேரம் கழித்து வற்றி வரும் நிலையில் இறக்கி விடவும். மேற்படி இரு வித சமையலையும் ஒன்றாகச் சேர்க்கவும்.. மட்டன் நல்லி பெப்பர் ப்ரை தயார்.

சிக்கன் கட்லெட்

தேவை:எலும்பில்லாத கோழிக்கறி –கால் கிலோ. ப்ரட் துண்டுகள் -7 பெரிய வெங்காயம்-1,பச்சைமிளகாய் -2 மல்லி இலை –சிறிதளவு,மிளகாய்தூள் -1 டீஸ்பூன்,மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்,எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு,உப்பு – தேவையான அளவு

ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

செய்முறை: கோழிக்கறியை உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து பொடியாக கொத்திக் கொள்ளவும்.ப்ரட்டை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். ப்ரட், சிக்கன், இவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் மொறு,மொறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.இதனை கட்லட் போல செய்து எண்ணெயிலிட்டுப் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான்…சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து

வாழை இலையை விரிச்சு.. அதுல சூடான சாதத்தோட…ருசியான மட்டன் நல்லி பெப்பர் ப்ரைக் குழம்பை ஊத்தி பிசைஞ்சு,,தொட்டுக்க…சிக்கன் கட்லெட்டும் இருந்தா..கணவர் குழந்தைகள் மட்டுமல்ல.. வீட்டுக்கு வந்த விருந்தினர் கூட அசந்து போவாங்க..

– இர.அகிலா போஸ்