’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

 

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

ஞாயிற்றுக்கிழமையே பிக்பாஸ் 50-வது நாள் என கமல் சொல்லியிருந்தார். ஆனால், பிக்பாஸின் நேற்றைய எப்பிசோட்டில்தான் 50-வது நாள் என்று குறிப்பிட்டார். இதில் சிலருக்குக் குழப்பம் வரலாம். கமல்ஹாசன் வருவதுபோன்ற எப்பிசோட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிப்பராகும். ஆனால், அவை இரண்டையும் சனிக்கிழமையே படமாக்கி விடுவார்கள். எனவே, கமல் நாளோடு தன்னைப் பொருத்திக்கொள்ள ஞாயிற்றுக்கிழமை எப்பிசோட்டில் 50-வது நாள் என்றார். நிஜமாகவே பிக்பாஸ் வீட்டில் அது சனிக்கிழமைதான். அதனால், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையே அங்கு 50-வது நாள். அதைத்தான் நேற்று ஒளிப்பரப்பினார்கள். (ஒரு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க… விசுத்தனமாக இருக்கிறதா…. அப்படின்னா, இந்தப் பாராவை ஜம்ப் பண்ணிட்டு அடுத்த பாராவுக்கு போயிடுங்க)

முந்தைய நாள் இரவு

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

ஆரி, பாலா, அனிதா, சம்யுக்தா, ஷனம் ஐவரும் அமர்ந்து ரியோவை அர்ச்சனா குடும்பம் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துகிறதை டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க. சரி, எல்லோரும் யதார்த்தமா பேசறாங்களேன்னு ஆரியும் பதார்த்தமா, ‘ரியோவுக்கு கேப்டன்ஷிப் போட்டியில நான் விட்டுக்கொடுத்தேன்’னு ஓப்பன் பண்ணினாரு. ’நானு நினைச்சேன்’னூ பின்பாட்டு பாடினார் ஷனர். சரி, இதுல என்ன இருக்குனு பலர் நினைக்கலாம். ஆனா, அடுத்த நாள் சூறாவளியை வெடிக்கப் போற ஒரு விஷயம் இதுதான்.

ஞாயிற்றுக்கிழமை

‘பம்பரக்கண்ணாலே’ பாட்டை ஒலிக்க விட்டார் பிக்கியின் தம்பி. ரம்யா, சம்யுக்தா, ஷிவானி இப்போல்லாம் தனி கேங்காகத்தான் டான்ஸ் ஆடுறாங்க. வெளியில ஒரு கும்பல் தனித்தனியா ஆடிட்டு இருப்பாங்க. வழக்கமாக கார்டன் ஏரியாவுலதான் டான்ஸ் ஆடணும்னு என்கிற எண்ணம் மாறிடுச்சு. அதனால பிக்கி எடிட்டர்தான் பத்து கேமராவிலிருந்து ஃபுட்டேஜ் எடுக்க வேண்டியிருக்கும்.

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

அங்கும் இங்கும் சுத்தாம நேரடியா எவிக்‌ஷன் நாமினேஷன் விஷயத்துக்கு வந்தார் பிக்கி. போனமுறை ‘என்னென்ன வார்த்தைகள் சொல்லி நாமினேட் பண்ணினாங்களோ… அதை பிக்கி போட்டுக்கொடுத்ததால் ஹவுஸ்மேட்ஸ் கொஞ்சம் உஷாராயிட்டாங்க.

ஜித்தன் ரமேஷையும் சம்யுக்தாவையும் அனிதா நாமினேட் பண்ணினார். அனிதாவையும், ஷனமையும் ரமேஷ் நாமினேட் செய்தார். ரமேஷையும் சோம்ஸையும் ஷனம் நாமினேட் பண்ணினாங்க. ஷனமையும் பாலாவையும் சோம்ஸ் நாமினேட் பண்ணினார். (ரூல்ஸை பிரேக் பண்ணி விளையாட்டின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கிறார்னு பாலா பற்றி புகார்… அப்பாடா, ஒரு வார்த்தை கிடைச்சுதுன்னு பிக்கி சந்தோஷம்)

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

இப்படி மாறி, மாறி நாமினேட் பண்ணிட்டே இருந்தாங்க. ஆரி கன்வெஃப்க்‌ஷன் ரூம்க்கு போகும்போது, ‘ஒரு நிமிஷத்துல வந்துடுவார்’னு ரமேஷ் அடித்த ஜோக் வினையானது. போகும்போதே சூடானார். ‘நெம்ப கோவமா இருக்கே’னுட்டு நிஷாவையும் சோம்ஸையும் நாமினேட் பண்ணினார். சோம், ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டியா இருக்கிறார். ஆண்கள் டிரெஸை பெண்கள் துவைச்சுக் கொடுக்கிறாங்கனு நிறைய புகார் வாசிச்சார்.

இறுதியாக, ‘ராஜா வீட்டுக்கண்ணுக்குட்டி’, ‘ரூல்ஸைப் பிரேக் பண்றாரு’, ‘சீன் கிரியேட் பண்றாரு’னு போட்டுக்கொடுக்கும் வார்த்தைகளைச் சொல்லி, சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, ஷனம், நிஷா ஆகியோரின் பட்டியலை வாசிச்சார் பிக்கி. அனிதாவைப் பலரும் சொல்லியிருந்தாங்க. அவர் ஃப்ரெண்டா நினைச்சு பழகினது ஒரே ஆள் சோம். அவருக்கும் அர்ச்சனா டீம் செய்வினை செஞ்சு தங்கள் பக்கம் இழுத்துட்டாங்க.

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

‘ரமேஷ்… நீங்க சொன்னது கோபம் வந்துட்டுச்சு… ஸாரி’ என சாதாரணமாக ஆரம்பித்தார் ஆரி. அது தனக்கான ஆப்புனு அப்ப நினைச்சிருக்க மாட்டார். டக்குனு பாலா, ‘நீங்க கேமராவுக்காகத்தான் நடிக்கிறீங்க… ரியோவுக்கு கேப்டன்ஷிப்பை விட்டுக்கொடுத்தேன்னு எங்கக்கிட்ட சொன்னீங்க… அதை ஏன் மறைக்கிறீங்க’னு அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத லாஜிக்கோடு கேட்டார். உண்மையில் பாலா, ஆரியைத் தாக்க வேண்டும் என்பதற்காக சொன்னார் என்பதே சரி. பாலா வித்தியாசமான ஆள். அவரை நம்பி எந்த ரகசியத்தையும் யாரும் சொல்லிட கூடாது. அது ஷிவானியாகவே இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் போட்டு உடைச்சிடுவார். அது அவரின் இயல்பான குணம்.

‘என்னாது… கேப்டன் ஷிப்பை விட்டுக்கொடுத்தியா?’னு அர்ச்சனா கும்பல் கோபத்துடன் தாவ, திடீரென்று ரம்யா, வக்கீலாகி, “பாலா தப்பா விளையாண்டு சம்யுக்தாவைக் கேப்டனாக்கினது நேர்மை இல்லன்னு சொன்ன நீங்களே, இப்போ ரியோவுக்காக விட்டுக்கொடுத்தேன்னு சொல்றீங்க… அது எப்படி நேர்மையாகும்’ என  சரியான கோணத்தின் இந்த சண்டையைத் திருப்பினார். சண்டைக்கு ஒரு டைரக்டர் இருந்தாதான் சரியா போகும்போல.

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

ரியோவுக்கும் ஆரிக்கும் இதுதொடர்பாக ஏற்கெனவே ஒரு டிஸ்கஸன் இருந்திருக்கும்போல. ‘நான் டீசண்டாத்தானே உங்கக்கிட்ட கேட்டேன். அதை ஏன் எல்லோர்கிட்டேயும் சொன்னீங்க’னு ரியோ அணத்தினார். ‘அய்யோ.. நானும் பாலா குருப்கிட்ட டீசண்டாத்தான் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவன் கூட்டத்துல கட்டுச்சோத்தை அவிழ்ப்பான்னு எனக்கு எப்படித் தெரியும்’னு ஆரியின் மைண்ட் வாய்ஸ் உலகுக்கே கேட்டிருக்கும்.

ரியோ தானவே வென்று, தானாவே கேப்டனாகினான் என்று நிஷா வாதாட, ‘ஆமாம்… ஆமாம்’னு சொல்லிட்டு இருந்தார் ஆரி. காரசாரமாகச் சண்டைபோய்ட்டு இருக்கையில், சண்டை போடாதவங்க அந்த இடத்திலிருந்து விலக, ஆடியன்ஸ் இல்லாம என்னாத்துக்கு சண்டைன்னு எல்லோரும் பிரிஞ்சாங்க.

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

ஆனா, ஆரி இதை விடல. பாலா அண்ட் கோ தனியா இந்தப் பிரச்னையைப் பேசிட்டு இருந்தப்ப, குறுக்கே புகுந்த ஆரி சண்டையை அங்கே தொடர்ந்தார். பாலாவோ, ‘கையை நீட்டிப் பேசாதீங்க. வாய்ஸை டவுண் பண்ணுங்க’னு சொல்லி ஆரியை வெறுப்பேத்த ஒரு கட்டத்தில் பாலா,’நானும் நீட்ட வேண்டியை நீட்டி பேசுவேன்னு’ சொன்னதும், ஆரி எரிமலையா வெடிச்சு ‘ஆம்பளையா இருந்தா செய்றா’னு கொந்தளிச்சார். பதிலுக்கு பாலா தரப்பிலிருந்து வார்த்தைகள் விழ, ‘ஏதேது… நிஜமான சண்டை மாதிரி இருக்கேன்னு ரம்யா ஒதுங்கினார். பாலாவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துவந்தார் சம்யுக்தா.

புது கேப்டன் வந்து சமாதனப்படுத்துவதற்குள் ஒருமாதிரி சண்டைக்கு இண்டர்வெல் விட்டிருந்தாங்க. பேசாம இரு பாலான்னு அமைதிப்படுத்தினார் ரியோ.

 ஆனாலும், ஆரி விடுவதாக இல்ல… பாலா செல்லும் இடங்களுக்கு எல்லாம் போய், சண்டையை கண்டின்யூ பண்ணினார். இதே தடித்த வார்த்தைகள் இரு தரப்பிலும் விழுந்துகொண்டே இருந்தன. கேப்டன் ரியோ வாய்ஸை உயர்த்தி, ‘இது நேஷனல் டெலிவிஷன்… இப்படியெல்லாம் அசிங்கமா பேசாதீங்க;னு நிதானத்திற்கு கொண்டு வந்தார். (நீ சும்மா இரு ரியோ.. இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது – பிக்கியின் மைண்ட் வாய்ஸ்)

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

இன்னொரு பக்கம், ‘நம்மளை நம்பி சொன்ன ஒரு விஷயத்தை சபையில சொன்னது தப்பு’னு அனிதா சரியான கோணத்தில் இந்த பிரச்னையைப் பேசினார். ஆனா, ஷனமோ, ’இத்தனை கேமரா இருக்கையில் என்ன ரகசியம்’னு கேட்டார். ‘பாலாகிட்ட தனியா சொன்ன எலுமிச்சை பழம் விஷயத்தை அர்ச்சனாகிட்ட சொன்னபோது அந்தக் குதி குதிச்சிங்களே… அப்பவும் கேமரா இருக்குனு விட்டுட வேண்டியதுதானே ஷனம். உங்களுக்கு வந்தா எலுமிச்சை சாறு. மத்தவங்களுக்கு வந்த மஞ்ச கலர் தண்ணீயா?

பாலா சமாதானம் செய்துகொள்ளும் முயற்சியாக ஆரியிடம் போய் பேசினார். ஆனா, அவர் இதை இன்னும் பெரிசா ஆக்கவே நினைத்ததால் விடல. பாலா காலில் விழக்கூட செய்தார். அதையும் நடிப்புன்னு சொல்லிட்டார்.

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

நாமினேஷன்ல ஒரு புது மாற்றத்தைக் கொண்டு வந்தார் பிக்கி. ஆஜித்க்கு கொடுத்த எவிக்‌ஷன் பிரீ பாஸ் போல இதுலேயும் ஒரு பாஸ் கொடுத்தார். இப்போ எவிக்‌ஷன் நாமினேஷன்ல உள்ளவங்க பேசி, ஒருத்தருக்கு அந்த பாஸைக் கொடுத்து தப்பிக்க வைக்க வேண்டும்.

உங்களுக்குப் பதில் வேறு யாரை நாமினேட் செய்யறீங்கனு பிக்கி கேட்டதற்கு, ஆரி – சம்யுக்தா, ரமேஷ் – ஷிவானி, நிஷா – ஆஜித், ஷனம் – சம்யுக்தா, அர்ச்சனா, பாலா- அர்ச்சனா, அனிதா – சம்யுக்தா, சோம் – கேபி, அர்ச்சனா எனப் பட்டியலையும் காரணத்தையும் வாசித்தாங்க. (இதையெல்லாம் வெளியில டிவியில மற்ற ஹவுஸ்மேட்ஸ் பார்த்திட்டு இருந்தார்கள்… இன்னும் வலுவான சண்டையை பிக்கி எதிர்பார்க்கிறார் போல)

’பாலா பண்ணினா ராங்கு’ அதையே நீங்க பண்ணினா ரைட்டா’ஆரியை வெளுத்த ரம்யா

பாஸ் வேண்டாம் என முதலில் பாலா விலகினார். பின் ஆரி, ரமேஷ் விலக சிறிதுநேரம் கழித்து சோம்ஸூம் விலகினார். அனிதா, ஷனம், நிஷா மூவருக்குமான போட்டியாக இருந்தது. கடைசியாக, நிஷா பக்கம் அதிக ஓட்டுகள் விழுவதுபோல தெரிந்ததும் அனிதா வேறோர் ஆயுதத்தை எடுத்தார். ‘இந்த பாஸ்… வெச்சு நல்லா வாழ்ந்து தொல… மனுஷன் தொடுவானா இதெல்லாம்’என்பதுபோல விட்டுக்கொடுத்தார். அனிதாவின் பொறியில் சரியாகச் சிக்கிய நிஷா, ‘இப்படி பிச்சை போடற மாதிரி இருந்தா வேணாம்’னு மான ரோஷம் பார்க்க, இதுதானே என் திட்டம்னு நினைச்ச அனிதா ‘அப்ப நானே வெச்சிக்கிறேன்’னு பாஸை எடுத்துகிட்டார்.

அனிதாவுக்குப் பதில் இன்னொருவரை நாமினேட் பண்ணச் சொல்ல, சம்யுக்தாவை செலக்ட் பண்ணினார். பின்கதை சுருக்கம் இல்லாமல் பிக்கி கடையைச் சாத்தினர்.