டி.வி.எஸ். குரூப் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் லாபம் சூப்பர்… 3 மாதத்தில் ரூ.62 கோடி லாபம்

டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அலுமினியம் டை-காஸ்ட் தயாரிப்புகள் சப்ளையில் முன்னணி நிறுவனமான விளங்குகிறது. அந்நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.

டி.வி.எஸ்.

2020 மார்ச் காலாண்டில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.62.05 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.43 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.50.27 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் வருவாய் குறைந்தபோதிலும் லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுந்தரம் கிளேட்டன்

சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.394.77 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.455.65 கோடியாக உயர்ந்து இருந்தது. நிறுவனத்தின் 58வது ஆண்டு பொதுக் கூட்டம் ஜூலை 30ம் தேதி வீடியோ கான்பரன்சிங் நடைபெற உள்ளதாக சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தேவையான அனுமதிகள் பெறப்பட்டது மற்றும் உற்பத்தி ஆலைகள் மற்றும் அலுவலகங்களை ஓரளவு மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...