சன் டிவி நெட்வொர்க் நிகர லாபம் ரூ.487.86 கோடி..

 

சன் டிவி நெட்வொர்க் நிகர லாபம் ரூ.487.86 கோடி..

சன் டிவி நெட்வொர்க் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.487.86 கோடி ஈட்டியுள்ளது.


நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன் டிவி நெட்வொர்க் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.487.86 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.245.23 கோடி ஈட்டியிருந்தது.

சன் டிவி நெட்வொர்க் நிகர லாபம் ரூ.487.86 கோடி..
சன் டிவி நெட்வொர்க்

2021 மார்ச் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.802.55 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.758.13 கோடி ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.352.02 கோடியாக உள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிகர லாபம் ரூ.487.86 கோடி..
சன் பிக்சர்ஸ்

2020-21ம் நிதியாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,525.24 கோடி ஈட்டியுள்ளது. இதே நிதியாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,176.89 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, சன் டிவி நெட்வொர்க் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.18 சதவீதம் குறைந்து ரூ.530.95ஆக குறைந்தது.