வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. சன் பார்மா…

 

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. சன் பார்மா…

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றும், மருந்து துறையை சேர்ந்த நிறுவனமுமான சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.399.8 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 37 சதவீதம் சரிவாகும். சென்ற காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. சன் பார்மா…

2020 மார்ச் காலாண்டில் சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 14.3 சதவீதம் உயர்ந்து 8,184.9 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் வரி செலவினமாக ரூ.83.09 கோடி மேற்கொண்டுள்ளது. சென்ற மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின இதர வருவாய் ரூ.102.23 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் இதர வருவாய் ரூ.281.53 கோடியாக இருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. சன் பார்மா…

2019-20 முழு நிதியாண்டில் சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் லாபமாக ரூ.3,764.93 கோடி ஈட்டியுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டைக் காட்டிலும் 41.3 சதவீதம் அதிகமாகும். 2019-20 நிதியாண்டில் சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.32,837.5 கோடியாக உயர்ந்துள்ளது.