விற்பனை சிறப்பு.. சன் பார்மா லாபம் ரூ.1,444 கோடி

 

விற்பனை சிறப்பு.. சன் பார்மா லாபம் ரூ.1,444 கோடி

சன் பார்மா 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,444.17 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (சன் பார்மா) நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன் பார்மா 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,444.17 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் சன்பார்மா நிறுவனத்துக்கு ரூ.1,655.60 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

விற்பனை சிறப்பு.. சன் பார்மா லாபம் ரூ.1,444 கோடி
சன் பார்மா

2021 ஜூன் காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.9,718.74 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் சன்பார்மா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.7,585.25 கோடி ஈட்டியிருந்தது.

விற்பனை சிறப்பு.. சன் பார்மா லாபம் ரூ.1,444 கோடி
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது சன் பார்மா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.63 சதவீதம் உயர்ந்து ரூ.794.85ஆக இருந்தது.