அரசாங்கம் விவசாயிகளிடம் பேச வேண்டும்.. அமைச்சர்கள் டி.வி.யில் விளக்கம் கொடுப்பதில் அர்த்தமில்லை.. சுக்பீர் சிங் பாதல்

அரசாங்கம் விவசாயிகளிடம் பேச வேண்டும்.. அமைச்சர்கள் டி.வி.யில் விளக்கம் கொடுப்பதில் அர்த்தமில்லை.. சுக்பீர் சிங் பாதல்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளிடம் பேச வேண்டும். அமைச்சர்கள் டி.வி.யில் தோன்றி விளக்கம் கொடுப்பதில் எந்தவொரு அர்த்தமில்லை என பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எம்.பி.யான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சராக இருந்த அந்த கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து வேளாண் மசோதாக்களில் கையெழுத்தி கூட என்று சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்கம் விவசாயிகளிடம் பேச வேண்டும்.. அமைச்சர்கள் டி.வி.யில் விளக்கம் கொடுப்பதில் அர்த்தமில்லை.. சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்

சிரோண்மணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண் மசோதாக்களை நிறுத்த எங்களால் முடிந்த சிறந்த முயற்சிகளை செய்தோம். அந்த மசோதாக்களில் குடியரசு தலைவர் கையெழுத்து போடாதவரை அது சட்டமாக மாறாது. மசோதாக்களை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தயவு செய்து அதை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். அதை அங்கே சரியாக விவாதிக்க விடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அரசாங்கம் விவசாயிகளிடம் பேச வேண்டும்.. அமைச்சர்கள் டி.வி.யில் விளக்கம் கொடுப்பதில் அர்த்தமில்லை.. சுக்பீர் சிங் பாதல்
கவுதம் அதானி, முகேஷ் அம்பானி

மத்திய அரசு விவசாயிகளிடம் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். டி.வி.களில் அமைச்சர்களை வைத்து விளக்கம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. விவசாயிகளை சந்திக்கவும், அவர்கள் சொல்வதை கேட்கவும் அதே அமைச்சர்களை நியமிக்க வேண்டும். நீங்கள் சந்தையை தனியாராக மாற்றினாலும், இல்லாவிட்டாலும் இடைத்தரகர்கள் இருப்பார்கள். அம்பானி அல்லது அதானி நேரடியாக பண்ணைகளுக்கு சென்று விளைபொருட்களை வாங்குவார் என்று நினைக்கிறீர்களாக? வெளிப்படையாக அவர்கள் இடைத்தரகர்களின் அடுக்கை கொண்டு இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.