நாச்சியப்பா வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி: எஸ்.பியிடம் சீரமைக்க கோரிய பொதுமக்கள்

நாச்சியப்பா வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி: எஸ்.பியிடம்  சீரமைக்க கோரிய  பொதுமக்கள்

ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பெருந்துறை, கே.என்.வி ரோட்டில் இருந்த வாகனங்கள் மட்டும் மேட்டூர் ரோடு வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாசியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் முனிசிபல் காலனி இடையன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மக்கள் கூடுதலாக நான்கு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது.

நாச்சியப்பா வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி: எஸ்.பியிடம்  சீரமைக்க கோரிய  பொதுமக்கள்

நாச்சியப்பா வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து சவிதா ரோடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதிப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

நாச்சியப்பா வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி: எஸ்.பியிடம்  சீரமைக்க கோரிய  பொதுமக்கள்

இந்நிலையில் நாச்சியப்பா நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வந்தார் எனினும் போக்குவரத்து குறைந்தபாடில்லை. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாச்சியப்பா வீதி போக்குவரத்து நெரிசலால் அவதி: எஸ்.பியிடம்  சீரமைக்க கோரிய  பொதுமக்கள்

இந்நிலையில் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் கோட்டை பொது மக்கள் நலச் சங்கம் சார்பில் எஸ்.பி. அலுவலகத்தில் நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் சரி செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.