பணியில் இருந்து நீக்கியதால் வேதனை… துப்புரவு தொழிலாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை…

 

பணியில் இருந்து நீக்கியதால் வேதனை…  துப்புரவு தொழிலாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை…

கோவை

கோவையில் பணியில் இருந்து நீக்கியதால் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையில் உள்ள சீதாலட்சுமி மகப்பேறு அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பெண்கள் உடைமாற்றும்போது புகைப்படம் எடுத்ததாக கூறி, மருத்துவமனை நிர்வாகம், ரங்கசாமியை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ரங்கசாமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் உறுக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த ரங்கசாமியை உறவினர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதித்தனர்.

பணியில் இருந்து நீக்கியதால் வேதனை…  துப்புரவு தொழிலாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை…

ஆனால் சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது வீடியோவை கைப்பற்றி விசாரித்தனர்.

அந்த வீடியோ பதிவில், மருத்துவமனை நிர்வாகத்திடம் தன் மீது பொய்யான புகாரை கூறி சிலர் பணியில் இருந்து நீக்க செய்ததாகவும், இதனால் குடும்பத்தை நடத்த முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தற்கொலைக்கு காரணமாக பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனிடையே இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.