பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

இந்திய-சீன பிரச்சினையில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக நிற்போம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த தினங்களுக்கு முன் தெரிவித்தார். உடனே காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரான பிரியங்கா காந்தி, சில எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவிக்கப்படாத பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர் என கிண்டல் செய்து இருந்தார். பிரியங்கா காந்தியின் கருத்து முதிர்ச்சியற்றது மற்றும் குழந்தைதனமானது என பகுஜன் சமாஜ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளர் சுதின்ற பாடோரியா இது தொடர்பாக கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவிக்கப்படாத பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர் என பிரியங்கா காந்தி தெரிவித்தது முதிர்ச்சியற்றது மற்றும் குழந்தைதனமான கருத்து. இந்த வகை அரசியலை தவிர்க்கவேண்டும். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நான் நம்புகிறேன், அவர் விரைவில் புரிந்து கொள்வார். எல்லைகளை பாதுகாப்பது இன்று நாட்டிற்கான சவால் மற்றும் இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம்.

சுதின்ற பாடோரியா

நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு முக்கியமானவை. இந்த பாடத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களின்போது நாம் கட்சி அரசியலை தாண்டி மேலே வர வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் முழு நாடும் மற்றும் எதிர்க்கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது நேற்று...

`அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தணும்!’- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கொந்தளிக்கும் பெற்றோர்கள்

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்....

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...
Open

ttn

Close