‘திடீர் ஆர்ப்பாட்டம்’ சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

 

‘திடீர் ஆர்ப்பாட்டம்’ சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

சென்னை போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் காலையில் பேருந்துகள் ஓடவில்லை.

‘திடீர் ஆர்ப்பாட்டம்’ சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

மத்திய நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து தேசிய பணமாக திட்டத்தை திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமாக உள்ள 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 15 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்களை தனியாரிடம் விட திட்டமிடப்பட்டுள்ளது.தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும், நீலகிரி மலை ரயிலும் தனியாருக்கு விடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் புதிய அரசு திட்டங்களையும் கட்டுமான திட்டங்களுக்கான நிதி திரட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

‘திடீர் ஆர்ப்பாட்டம்’ சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் காலையிலிருந்தே பேருந்துகள் ஓடவில்லை.அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் உரிய நேரத்தில் தாங்கள் செல்லும் இடங்களுக்கு போக முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர் .