கோவில் நிலத்தில் திடீரென தோன்றிய 12 அடி பள்ளம்.. மன்னர் காலத்து சுரங்கப் பாதையா?!

 

கோவில் நிலத்தில் திடீரென தோன்றிய 12 அடி பள்ளம்.. மன்னர் காலத்து சுரங்கப் பாதையா?!

திருப்பூர் மாவட்டம், அவநாசியை அடுத்த கருவலூர் என்னும் கிராமத்தில் மிகப் பழமையான வேணுகோபால பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அந்த ஊர் மக்கள் வழக்கமாக விவசாயம் செய்வார்களாம். அதே போல இந்த முறையும் விவசாயம் செய்ய கடந்த திங்கள் கிழமை உழவுப் பணி நடந்துள்ளது. அதன் பிறகு அந்த நிலத்தில் நடவுப் பணிகள் மேற்கொள்ளவிருந்தது.

கோவில் நிலத்தில் திடீரென தோன்றிய 12 அடி பள்ளம்.. மன்னர் காலத்து சுரங்கப் பாதையா?!

ஆனால் இன்று அந்த நிலத்தில் நடுவே சுமார் 2 அடி அகலமும் 12 அடி ஆழமும் கொண்ட பள்ளம் புலப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக அந்த ஊர் முழுவதும் தகவல் பரவ ஊர்மக்கள் வந்து பார்வையிட தொடங்கியுள்ளனர். மேலும், அந்த பள்ளம் பழங்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களின் சுரங்கப் பாதையாக கூட இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த வருவாய்த் துறையினர் அக்கிராமத்துக்கு வந்து அந்த பள்ளத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் இது தானியம் சேமிக்கும் இடங்காக இருக்கலாம் என்றும் சென்னிமலை பகுதியில் இதுபோன்ற பள்ளம் இருந்ததாகவும் அது தானிய கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.