சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

 

சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில்சேவை மீண்டும் கடந்த 25 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இருப்பினும்அரசு பணியாளர்கள், முன்கள பணியாளர்களான மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், துப்புரப்பணியாளர்கள் என பலரும் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டது.தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது. பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

இந்நிலையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில்சேவை 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளது
கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கால தாமதம் காரணமாக பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.