மகளிர் இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

மகளிர் இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

பெண்கள் வரவேற்பு
தமிழகத்தில் இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மகளிர் இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மகளிர் இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

நேற்று வேலூர் மாவட்டத்தில் பேசிய அவர் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். தற்போது ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் மானியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பல பெண்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க ரூ.354 கோடி ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத முகக் கவசம் வழங்கப்படுவது, ராணிப்பேட்டையில் பெண்களுக்கான விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.