ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

 

ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப்படுவதால், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

இச்சூழலில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டபோது, கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை நோக்கிச் சென்றது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளில் குறையத் தொடங்கியது. ஆனால், இந்தியாவில் மட்டும் அதன் விலை குறைந்தபாடில்லை. விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

பெட்ரோல், டீசல் விலை குறித்து பாஜக தலைவரான சுப்பிரமணியன் சுவாமியே பாஜக அரசைக் கடிந்துகொண்டிருக்கிறார். பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.30, அதன்பின் மத்திய, மாநில அரசு விதிக்கும் வரிகள், டீலர் கமிஷன் ஆகியவை இணைந்து கூடுதலாக ரூ.60 சேர்த்து ரூ.90க்கு விற்பனை செய்வதாக அவர் முன்பே குற்றஞ்சாட்டியிருந்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியால் மத்திய அரசு நாட்டு மக்களைச் சுரண்டுவதாகவும் கடுமையாகச் சாடியிருந்தார்.

ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

இச்சூழலில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை விமர்சிக்கும் விதமாக சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். எப்போதுமே பாஜவை நேரடியாகவே குற்றஞ்சாட்டும் அவர், இம்முறை ராமாயணத்தை மேற்கோள் காட்டி நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு நுணுக்கமாக விமர்சித்திருக்கிறார்.

“ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று தனது ட்வீட்டில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். ராமாயணத்தின்படி ராம ராஜ்யம் நடக்கும் இந்தியாவில் விலை குறையாமல், ஏன் உயர்ந்துகொண்டே போகிறது என்பதே சுவாமியின் விமர்சனமாக இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசின் நிதிக்கொள்கைகள் மோசமாக இருப்பதாக சுவாமி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுவாமி விமர்சிப்பதும், அதனை பாஜக கண்டுகொள்ளாமல் விடுவதும் வழக்கமான நிகழ்வு தான்.