கொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு! – செங்கோட்டையன் தகவல்

 

கொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு! – செங்கோட்டையன் தகவல்

பள்ளியின் வேலைநாட்கள் குறைவதால் அதற்கு ஏற்றார்போல் பாட புத்தகங்களில் உள்ள பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு! – செங்கோட்டையன் தகவல்கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை. இதற்குள்ளாக தனியார்ப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொடங்கிவிட்டன. அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளதால் ஒரு வீட்டில் எல்லோருக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களைப் போல கல்வி கற்க முடியவில்லை. பள்ளி வேலை நாள் குறைந்துகொண்டே செல்வதால் அனைத்து பாடங்களையும் நடத்துவது சாத்தியமும் இல்லை.

கொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு! – செங்கோட்டையன் தகவல்இதனால், பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தில் 150 புகைப்படக் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், “1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் வருகிற 30ம் தேதிக்குள் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு! – செங்கோட்டையன் தகவல்கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளியின் வேலை நாள் குறைந்துள்ளது. இதன் காரணமாக பாட புத்தகங்களில் உள்ள பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், பாட புத்தகத்தில் உள்ள பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.