உயிரை பறித்த ஆன்லைன் வகுப்பு : எம்பி கனிமொழி வேதனை பதிவு !

 

உயிரை பறித்த ஆன்லைன் வகுப்பு : எம்பி கனிமொழி  வேதனை பதிவு !

ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்கிரபாண்டி என்ற தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் வகுப்புகளைப் புறக்கணித்து வந்துள்ளார். இதனால் அவரது தந்தை இளங்கோவன் கண்டித்ததால் மனமுடைந்த விக்கிரபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரை பறித்த ஆன்லைன் வகுப்பு : எம்பி கனிமொழி  வேதனை பதிவு !

அதேபோல் உளுந்தூர்பேட்டையில் ஒரு குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் படித்து வந்த நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் நித்தியஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரே வாரத்தில் ஆன்லைன் வகுப்பால் இரண்டு மாணவர்கள் உயிர் பறிபோயுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.