‘சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ – மாணவர் அமைப்பு போராட்டம்!

‘சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ – மாணவர் அமைப்பு போராட்டம்!

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. சிறப்பு அந்தஸ்து விவகாரம், அரியர் தேர்ச்சி உள்ளிட்ட பல விவகாரங்களில் அரசிடம் கலந்தாலோசிக்காமல் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் மீது ஊழல் புகார்களும் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ – மாணவர் அமைப்பு போராட்டம்!

இந்த நிலையில், சூரப்பாவை தகுதிநீக்கம் செய்யக்கோரி மாணவர் அமைப்பு சார்பில் அண்ணா பல்கலைக் கழகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மீது ஊழல் புகார்கள் எழுந்திருப்பதால் அவரை தகுதிநீக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணைக்குழு விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

‘சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ – மாணவர் அமைப்பு போராட்டம்!

மேலும் சூரப்பா மீது புகாரளிக்க மக்கள் தயாராக இருப்பதாகவும், அந்த புகார்களை ஏற்று விசாரணையை தொடர வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தனர். காவல்துறை உத்தரவை மீறி இந்த போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.