நாளையே மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்! திடீர் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

 

நாளையே மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்! திடீர் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கொரோனாவால் மாணவர்களுக்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முழு பாதுகாப்புடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ், தேர்வான மாணவர்களுக்கு முதல்வர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

நாளையே மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்! திடீர் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து கவுன்சிலிங்கிற்காக மட்டும் தயாராகிவந்த மாணவர்கள் சென்னையில் கிடைத்த கல்லூரிகளில் எப்படி சேருவது என தெரியாது முழித்துவருகின்றனர். ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவித்துவருகின்றனர். வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களிலும் சேர்க்கை தேதி 19.11.2020 என குறிப்பிடப்பட்டுள்ளது.