“செல்போன் சிக்னல் இல்லை”… மரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்!

 

“செல்போன் சிக்னல் இல்லை”… மரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்!

நாமக்கல்

ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததல், மாணவர்கள் ஆலமரத்தின் மீது ஏறி ஆபாத்தான முறையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்கு உட்பட்டவை பெரப்பஞ்சோலை, பெரிய கோம்பை கிராமங்கள். இந்த 2 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

“செல்போன் சிக்னல் இல்லை”… மரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்!

இந்த நிலையில், பெரப்பஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் கோபுங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், சிக்னல் கிடைக்காமல் அந்த பகுதி மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகினறனர். இதனால் அங்குள்ள உயரமான ஆலமரத்தின் மீது ஏறி, ஆபத்தான முறையில் அதன் கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

படிப்பிற்காக மாணவர்கள் உயிரையே பணயம் வைத்து இந்த செயலில் ஈடுபடுவது, அவர்களது பெற்றோர், கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.