கல்லூரி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்!

 

கல்லூரி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாகபள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளேடு இளங்கலை இறுதியாண்டு மாணவிகளுக்கும் கல்லூரிகள் துவங்கியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு வகுப்புகளும் தற்போது ஆன்லைனிலேயே தொடருகிறது. இந்த நிலையில் தான், இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.7ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பின்னர் கல்லூரிக்கு செல்வது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்!

தமிழகத்தில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.