மின்சார ரயில்களில் மாணவர்களுக்கும் அனுமதி!

 

மின்சார ரயில்களில் மாணவர்களுக்கும் அனுமதி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, சென்னை புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. முதலில் அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. வார நாட்களில் அலுவலகத்திற்கு செல்லும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 660 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, 401 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில்களில் மாணவர்களுக்கும் அனுமதி!

இந்நிலையில் தற்போது 9,10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வரும் 15 ஆம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.