மதுரை தெப்பக்குளம் அருகே கல்விக்கடன் மறுக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை!

 

மதுரை தெப்பக்குளம் அருகே கல்விக்கடன் மறுக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை!

மதுரையில் கல்விக்கடன் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெப்பக்குளம் தேவிநகர் பகுதியை சேர்ந்த காசிராஜன் என்பவரது மகள் தாரணி. கடந்த 2019 ஆம் ஆண்டு 12 ஆம் தேர்ச்சி பெற்ற இவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

மதுரை தெப்பக்குளம் அருகே கல்விக்கடன் மறுக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை!

இதனையடுத்து தனியார் அழகு நிலைய கல்வி நிறுவனத்தில் தங்கி படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணம் கட்ட அவரது பெற்றோரிடம் வசதி இல்லாததால் கல்விக்கட்டணத்திற்காக நிதி நிறுவனத்தை நாடியுள்ளார்.

அதனடிப்படையில் நிதிநிறுவனத்தை தொடர்பு கொண்ட மாணவி, கல்விகட்டணத்திற்கான ஆவணக்கட்டணமாக 1 லட்சத்திற்கும் மேலாக செலுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் 23 ஆயிரம் ரூபாயை பெற்றோரிடம் வாங்கி அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் அனுப்பினார். இருப்பினும் அந்த நிதி நிறுவனம் கடன் வழங்காததால் தாய் கடைக்கு சென்றநேரத்தில் வீட்டிலிருந்த சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினருக்கு மாணவியின் செல்போனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.