‘தம்பி எந்த காலேஜுப்பா நீ’.. குஷ்புவிடம் மாணவன் வைத்த ‘அந்த கோரிக்கை’!

 

‘தம்பி எந்த காலேஜுப்பா நீ’.. குஷ்புவிடம் மாணவன் வைத்த ‘அந்த கோரிக்கை’!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பு. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களில், நட்சத்திர வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் குஷ்பு மட்டும் தான். தேர்தலில் போட்டியிட பாஜகவினர் பலர் வரிசைக் கட்டி நின்ற சூழலிலும், குஷ்புவுக்கு பாஜக தலைமை வாய்ப்பு கொடுத்தது. அதனால், இந்த வாய்ப்பை நழுவ விடாமல் எப்படியாவது வென்று விட வேண்டுமென குஷ்பு துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தீவிரமாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘தம்பி எந்த காலேஜுப்பா நீ’.. குஷ்புவிடம் மாணவன் வைத்த ‘அந்த கோரிக்கை’!

அந்த வகையில், நேற்று சூளைமேடு பகுதியில் குஷ்பு வழக்கம் போல பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அச்சமயம் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர், செமஸ்டர் தேர்வு எல்லாத்தையும் கேன்சல் பண்ணுங்க என கூச்சலித்தார். இதை கூட்டத்தில் இருந்த எல்லாரும் கவனித்து விட்டார்கள். குஷ்பு காதிலும் அது விழுந்தது.

‘தம்பி எந்த காலேஜுப்பா நீ’.. குஷ்புவிடம் மாணவன் வைத்த ‘அந்த கோரிக்கை’!

உடனே குஷ்பு.. தம்பி நீ எந்த காலேஜ் பா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காலேஜ் பெயரை அந்த மாணவர் சொல்ல மறுத்திருக்கிறார். இதையடுத்து ‘கொரோனாவால் தான் நிறைய நாட்கள் லீவ் கிடைச்சாச்சே என்று குஷ்பு சொல்ல, ‘பப்ளிக் எக்ஸாம் மட்டும் கேன்சல் பண்ணிட்டீங்க.. இதையும் செய்யுங்க’ என மாணவர் குஷ்புவிடம் கூறியிருக்கிறார். குஷ்பு மீண்டும் நீ எந்த காலேஜ் என்று கேட்டவுடன், அந்த மாணவன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.