10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை… பெற்றோர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு!

 

10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை… பெற்றோர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு!

ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பார்த்திபன்(15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் பார்த்திபன் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகிறார். இவர் சமீபகாலமாக பப்ஜி கேம் அடிமையாகியுள்ளார். நேற்று முன்தினம் ஆன்லைன் வகுப்பைக் கூட கவனிக்காமல் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதை கவனித்த சிறுவனின் தாய் அவரை கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை… பெற்றோர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு!

தாயிடம் வெகுநேரமாக கெஞ்சியும் செல்போனை திருப்பித் தராததால் வீட்டை விட்டு வெளியேறிய பார்த்திபன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் சிறுவனின் உடலை தேடியுள்ளனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது உடல் காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.