பலத்த காற்று வீசும்: மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

பலத்த காற்று வீசும்: மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்: மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேலும், தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளிலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.