சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பை போக்கும் ஸ்டிராபெரி!

 

சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பை போக்கும் ஸ்டிராபெரி!

ஸ்டிராபெரி பழங்கள் மிகவும் சுவையானது, ஊட்டச்சத்து நிறைந்தது என்பது நமக்குத் தெரியும். இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா. இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க ஸ்டிராபெரி மிகப்பெரிய அளவில் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சருமத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்டிராபெரி எப்படி எல்லாம் உதவுகின்ற என்று பார்ப்போம்.

சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பை போக்கும் ஸ்டிராபெரி!

ஸ்டிராபெரில் அதிகப்படியாக வைட்டமின் சி உள்ளது. இது தவிர மாங்கனீசு, ஃபோலேட் (பி9), பொட்டாசியம், பாஸ்பேட் உள்ளிட்டவையும் உள்ளன. வைட்டமின் சி, பாஸ்பேட் கலவையானது முகத்தைப் பொலிவாக்குகிறது.

வைட்டமின் சி முகத்தில் ஏற்படக் கூடிய வீக்கம், முகப்பரு உள்ளிட்டவற்றைப் போக்க துணை செய்கிறது.

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சல் ஏற்படக் கூடிய பாதிப்பை ஸ்டிராபெரியில் உள்ள Ellagic அமிலம் தடுக்கிறது. சருமத்தில் உள்ள கொலாஜன் இழப்பை இது தடுக்கிறது. இதன் காரணமாக சரும சுருக்கம் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஸ்டிராபெரியில் உள்ள malic அமிலம் பற்களில் உள்ள கரைகளை நீக்கி, வெண்மையாக்க உதவுகிறது. ஸ்டிராபெரியை பற்கள் மீது தேய்த்து சில நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வருவதன் மூலம் வெண்ணிற பற்களைப் பெறலாம்.

கண்களைச் சுற்றி வீக்கம், கருவளையம் இருந்தால் ஸ்டிராபெரியை மசித்து பூசி ஊற விட வேண்டும். ஸ்டிராபெரியை வெட்டி கண்கள் மீது வைத்தும் ஓய்வெடுக்கலாம். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலனை பெறலாம்.

ஸ்டிராபெரியில்  alpha hydroxy acids என்ற அமிலம் உள்ளது. இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள கருப்பு, சிவப்பு புள்ளிகளை நீக்கவும் இது துணை புரிகிறது. இறந்த செல்களை அகற்றுவதுடன் அழுக்கு, பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஸ்டிராபெரியை மசித்து பாதங்கள் மீது தடவி ஊறவைத்துக் கழுவி வந்தால் பாதங்கள் மென்மையாகும். ஸ்டிராபெரியுடன் கிளசரின், பொடித்த ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை காலில் தடவித் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இறந்த செல்கள் அகலும்.

ஸ்டிராபெரியை தடவுவதுடன் அவற்றைச் சாப்பிடுவது, ஜூஸ் செய்து அருந்துவது பலன்களை இரட்டிப்பாக்கும்.

ஸ்டிராபெரி ஒரே இரவில் அனைத்தையும் சரியாக்கிவிடும் என்று கருதக் கூடாது. தொடர்ந்து ஸ்டிராபெரியை பயன்படுத்தி வருவதன் மூலம் பலன்களைப் பெறலாம்.