“வலுவான தமிழக அரசின் செயல்பட்டால் புயல் வலுவிழந்தது” : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

“வலுவான தமிழக அரசின் செயல்பட்டால் புயல் வலுவிழந்தது” : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

புயலின் தாக்கம் காரணமாக டிசம்பர் 1 முதல் 4 வரை பாதிப்புகள் இருக்கக் கூடும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“வலுவான தமிழக அரசின் செயல்பட்டால் புயல் வலுவிழந்தது” : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “புயல் தாக்கம் காரணமாக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தமிழகம் வந்துள்ளனர். அதில் கன்னியாகுமரியில் இரண்டு குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும், திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் என மொத்தம் ஒன்பது குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

“வலுவான தமிழக அரசின் செயல்பட்டால் புயல் வலுவிழந்தது” : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ஆழ்கடலில் மீன்பிடித்து வந்த மீனவர்களுக்கு முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதேபோல் தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களில் உள்ள மீனவர்களின் பாதிப்பு குறித்தும் கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புயலின் தாக்கம் காரணமாக டிசம்பர் 1 முதல் 4 வரை பாதிப்புகள் இருக்கக் கூடும். இதனால் மக்கள் தேவை இன்றி வெளியே வரவேண்டாம். புயல் நகரும் திசையைப் பொறுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

“வலுவான தமிழக அரசின் செயல்பட்டால் புயல் வலுவிழந்தது” : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழக அரசு வலுவான செயல்பாடுகள் செய்து வருவதால் புயல் வலுவிழந்து காணப்படுகிறது. நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய குழு வரும் 5-ஆம் தேதி தமிழகத்திற்கு வருவதாகவும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.