ரூ.60 லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு

 

ரூ.60 லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஆந்திரா

ரூ.60 லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு

சித்தூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 277 செல்போன்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய, மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்,. இந்த குழுவில், உயர்கல்வி பயின்ற 20 இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு திருடப்பட்ட செல்போன்களை மீட்பது குறித்து தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருடப்பட்ட செல்போன்களை, அவற்றின் இஎம்ஐ எண்கள் அடிப்படையில் தற்போது யாரிடம் உள்ளது என்று கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அவர்களை தொடர்பு கொண்டு திருட்டு செல்போன்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க செய்தனர். இதனால் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து, சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான 277 செல்போன்களை மீட்டனர். மேலும், செல்போன்களை திருடி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். செல்போன்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு, எஸ்.பி செந்தில்குமார் நேரில் பாராட்டு தெரிவித்தார்.