துரைமுருகனுக்கு அதிக அதிகாரம் செல்வதை தடுக்க ஸ்டாலின் திட்டம்?

 

துரைமுருகனுக்கு அதிக அதிகாரம் செல்வதை தடுக்க ஸ்டாலின் திட்டம்?


தி.மு.க-வில் பொதுச் செயலாளராக வர உள்ள துரைமுருகனுக்கு அதிக அதிகாரங்கள் சென்றுவிடுவதைத் தடுக்க இணைப் பொதுச் செயலாளர் பதவியிடங்களை உருவாக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதே போல் ஏ.வ.வேலு, ஐ.பெரியாசமி, பொன்முடி உள்ளிட்டோரை ஓரம் கட்டிவிட்டு டி.ஆர்.பாலு தி.மு.க பொருளாளராக வருவதும் உறுதியாகிவிட்டது.

துரைமுருகனுக்கு அதிக அதிகாரம் செல்வதை தடுக்க ஸ்டாலின் திட்டம்?
துரைமுருகன்


இதனால் கட்சியினர் சீனியர்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க புதிதாக பதவிகளை உருவாக்கி, அதில் அதில் அதிருப்தி தலைவர்களை அமர வைக்க அழகு பார்க்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

துரைமுருகனுக்கு அதிக அதிகாரம் செல்வதை தடுக்க ஸ்டாலின் திட்டம்?
டி.ஆர்.பாலு


கு.க.செல்வம் அணி தாவிய போதே மற்றொரு முக்கிய பிரமுகர், நாடாளுமன்ற உறுப்பினர் அணி தாவுவார் என்று பேச்சு கிளம்பியது. அது ஜெகத்ரட்சகனா அல்லது துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தா என்ற கேள்வி எழுந்தது.
எதிர்க்கட்சி முகாமுடன் துரைமுருகன் எப்போதும் தொடர்பில் இருப்பதாக புகார் வருகிறது. அவர் பொதுச் செயலாளர் ஆகிவிட்டால், கட்சியில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்புகின்றனர்.

துரைமுருகனுக்கு அதிக அதிகாரம் செல்வதை தடுக்க ஸ்டாலின் திட்டம்?
ஏ.வ.வேலு


இதைத் தொடர்ந்து இதுவரை இல்லாத இணை பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக அதிகாரங்கள் பொதுச் செயலாளரிடம் குவிந்திருக்காமல் இணைப் பொதுச் செயலாளர்களுக்கு பிரித்து வழங்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இந்த பதவிக்கு பொங்கலூர் பழனிசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.