ஸ்டாலின் பதவியேற்பு விழா : ஓபிஎஸ், கமல் பங்கேற்பு!

 

ஸ்டாலின் பதவியேற்பு விழா : ஓபிஎஸ், கமல் பங்கேற்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.

ஸ்டாலின் பதவியேற்பு விழா : ஓபிஎஸ், கமல் பங்கேற்பு!

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு க ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் குரானா காரணமாக எளிமையாக நடைபெறும் இவ்விழாவில் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர். மு. க .ஸ்டாலின் பதவியேற்பு தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஸ்டாலின் பதவியேற்பு விழா : ஓபிஎஸ், கமல் பங்கேற்பு!

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தனபால், நவநீத கிருஷ்ணன் , பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி ,முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் , வைகோ ,திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன் ,வீரமணி, வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.மு க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்றுள்ளார்.