மூத்த பத்திரிகையாளர் கோசல் ராம் மறைவு… ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!

 

மூத்த பத்திரிகையாளர் கோசல் ராம் மறைவு… ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!

சன் டிவி, நியூஸ் 7 தமிழ், தினகரன், குமுதம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார். பத்திரிக்கையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் கோசல் ராம் மறைவு… ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!

தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழின் மூத்த பத்திரிகையாளர்களில் முக்கியமானவரான கோசல்ராம் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தினபூமி, தினகரன், தமிழ் முரசு, விகடன் போன்ற நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களிலும் முக்கிய பணியாற்றிய அவர் “நம்ம அடையாளம்” என்ற பத்திரிகையையும் தொடங்கி சிறப்பாக நடத்தியவர்.

May be an image of 5 people, people standing and flower

புலனாய்வு இதழியலில் சிறந்து விளங்கினார். இறுதியாக நியூஸ்7 செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர், 49 வயதில் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோசல்ராமின் உடல் பத்திரிகையாளர்கள் அஞ்சலிக்காக சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 06.04.2021 செவ்வாய் காலை 9.30 மணி வரை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.