நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

 

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

நாளை காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்தது போல மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றியது. 159 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இன்று மாலை நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், சட்டமன்றக் குழு தலைவராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தினை அளிக்கிறார் முக ஸ்டாலின். அப்போது தமிழக அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கும் ஸ்டாலின், ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா பரவலால் மிக எளிய முறையில் பதவியேற்பு விழா நடக்க உள்ளது