நெருக்கும் பொன்முடி- தவிக்கும் ஸ்டாலின்

 

நெருக்கும் பொன்முடி- தவிக்கும் ஸ்டாலின்

திமுகவில் இப்போது திரும்பும் திசையெல்லாம் உட்கட்சி பூசல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. லேட்டஸ்டாக விழுப்புரத்திலிருந்து வெடிகுண்டை வீசி எறிந்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதே கட்சித் தலைவர் ஸ்டாலின் என்பதுதான் இதில் சுவாரசியம்.

நெருக்கும் பொன்முடி- தவிக்கும் ஸ்டாலின்

ஸ்டாலின், தனது நிர்வாக மாறுதல் திட்டத்தில், பொன்முடியை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு துணைப் பொதுச் செயலாளராக்கத் திட்டமிட்டுள்ளார். பொன்முடி இடத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவும் அவர் தீர்மானித்திருக்கிறார்.
இந்த செய்தியறிந்து கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம் பொன்முடி. ‘’சீனியரான என்னை இப்படி அவமதிப்பு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என தனது ஆதரவாளர்களிடம் கொதித்திருக்கிறார் அவர்.

பொன்முடியின் இந்த கோபாவேசத்திற்கு காரணங்கள் நிறைய உண்டு. இது பற்றி அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ‘’தலைவர் மறைவுக்கு பிறகு கட்சியில் எல்லாமே தலைகீழா நடக்குது. ஸ்டாலின் குடும்பத்தினரின் தலையீடு கட்சிக்குள்ள ஜாஸ்தியா இருக்குது. பொன்முடியும், நேருவும் ஒரே சமயத்தில்தான் (1989) மந்திரி ஆனாங்க. அதுவும் மந்திரிசபையில் நேருவை விட பொன்முடியைத்தான் உயர்ந்த இடத்தில் கலைஞர் வச்சிருந்தாரு. ஆனா இப்ப நிலமை என்ன?

நெருக்கும் பொன்முடி- தவிக்கும் ஸ்டாலின்


நேரு முதன்மைச் செயலாளரா ஆகிட்டாரு. அதேநேரம் பொன்முடியை ஏற்கனவே 3 துணைப் பொதுச் செயலாளர்களோடு இப்ப நாலாவதா பொறுப்பு கொடுக்கிறாங்க. இது அண்ணனை அவமதிக்கும் செயல்தானே!’’ என்கிறார்கள் ஆவேசம் தணியாமல்.

பொன்முடி தரப்பின் இந்த கோபாவேசத்தைக் கண்டு அதிர்ந்துபோன ஸ்டாலின், சில தூதுவர்கள் மூலம் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அப்போது தூதுவர்களிடம், ‘’ எனது சீனியாரிட்டிக்கு ஏற்ற மாதிரி பொறுப்பு வேணும். நேருவிடம் இருக்கும் முதன்மைச் செயலாளர் பொறுப்பை இரண்டாக்கி ஒன்றை என்னிடம் தர வேண்டும். திருச்சி வரையுள்ள மாவட்டங்கள் என் பொறுப்பிலும், அதற்கு தெற்கேயுள்ள மாவட்டங்கள் நேரு பொறுப்பிலும்

நெருக்கும் பொன்முடி- தவிக்கும் ஸ்டாலின்

இருக்கட்டும். அதேபோல விழுப்புரம் மத்திய மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒன்றிற்கு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்துக் கொள்ளட்டும். இன்னொரு மாவட்டத்திற்கு எனது மகன் கௌதம சிகாமணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டும். இதற்கு சம்மதம் இல்லாவிட்டால் இப்போதைய நிலையே தொடரட்டும்’’ என கறாராக சொல்லியிருக்கிறார்.

பொன்முடியின் நிபந்தனைகளை தூதுவர்கள் பாஸ் பண்ண, அடுத்து என்ன செய்வது என்கிற தவிப்பில் இருக்கிறாராம் ஸ்டாலின்.