முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

 

முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக இன்று மாலை டெல்லி செல்கிறார் .

முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில் கொரோனா காரணமாக அவர் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை சந்திக்காமல் இருந்தார். இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது பிரதமரிடம் நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.

முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

இந்நிலையில்தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக இன்று மாலை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் அவர் நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். மரியாதை நிமித்தமாக நடைபெறும் இந்த சந்திப்பில், தலைமைச் செயலர் இறையன்பு , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து நாளை இரவே ஸ்டாலின் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார்.