விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த தென்னமநாடு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் 65 லட்சம் முட்டை நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது இதுவரை குறுவை சாகுபடியில் இல்லாத வரலாற்று நிகழ்வு என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

மேலும், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், இருந்தாலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருந்தாலும் கொள்முதல் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

இதுவரை டெல்டா மாவட்டங்களில் 90 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டுவந்தாலும் அதை கொள்முதல் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகவும், நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு, டிவிட்டரில் விவசாயிகளின் வாழ்க்கை அமைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளாக இருக்கக்கூடிய தங்களுக்கு தெரியும் என்றும், எனவே விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்