‘முதல்வரான பிறகு முதன்முறையாக’ திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

 

‘முதல்வரான பிறகு முதன்முறையாக’ திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

முதல்வரான் பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார்.

‘முதல்வரான பிறகு முதன்முறையாக’ திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக கடந்த மே 7-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு பத்திரிகையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டவுடன், ஆவின் பால் விலை குறைப்பு ,மதுரையில் கலைஞர் நூலகம், அனைத்து மகளிரும், திருநங்கைகளும், மாற்றுத் திறனாளிகளும் சாதாரண நகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் பல அதிரடி முடிவுகளை எடுத்து மு.க.ஸ்டாலின் பொருட்களை பதுக்குவோர் மற்றும் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் . கோவில்பட்டியில் எழுத்தாளர் கீ.ரா.வுக்கு சிலை, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நிவாரண நிதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை மற்றும் ஊக்கத்தொகை, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

‘முதல்வரான பிறகு முதன்முறையாக’ திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாளை மாலை திருவாரூர் செல்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லம், காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். ஜூலை 7ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு முதல்வரான பிறகு ஸ்டாலின் செல்வது அங்குள்ள மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.