கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை!

புரட்டாசி ஒன்றாம் தேதி பிறக்கும் அதே நாளில் மகாளய அமாவாசை வருவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாளாய அமாவாசையான இன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும். இன்றைய தினத்தில் கொடுக்கும் தானத்தினால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். தோஷங்கள் நீங்கி யோகங்கள் அதிகமாக கிடைக்கும். சுப காரியம் ஏற்படுவதில் இருந்த தடைகள் நீங்கி நல்லது நிறைய நடைபெறும். இந்நாளில் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மஹாயள அமாவாசை தினமான இன்று தமிழ்நாட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டடுவார்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை!

கொரோனா பரவல் காரணமாக நீர் நிலைகளில் நீராட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட காவிரி படித்துறையில் பொது மக்கள் கூடவும் திதி, தர்ப்பணம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது, இதனால் நேற்று ஒரு சிலர் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை!

மேலும் இன்று அம்மா மண்டபம் படித்துறைக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திதி, தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மஹாள அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்யவார்கள், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர் வருவது வழக்கம் ஆனால் அம்மா மண்டபம் படித்துறை கொரோனா பரவல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை!