சசிகலாவால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாது: பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்

 

சசிகலாவால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாது: பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை கூட்டணியிலும், முதல்வர் வேட்பாளர் பதவியிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ எடப்பாடி முதல்வர் பதவிக்கு போட்டியிடுவாரா? ஓபிஎஸ் போட்டியிடுவாரா என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகவிருப்பதால் அதிமுகவில் என்ன நடக்குமோ என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சசிகலாவால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாது: பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கரூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் , “திமுக முன்னணி தலைவர்கள் தென் தமிழகத்தில் எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. போட்டியிட மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாஜக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியே வருவார் என தெரியாது. ஆனால் அரசியலில் அவரால் பெரிதாக சாதிக்க முடியாது. அவர் அரசியலில் ஈடுபட்டாலும், டிடிவி தினகரன் அரசியலில் இழந்த செல்வாக்கை சசிகலாவால் மீட்க முடியாது” என தெரிவித்தார்.