திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் நிராகரிப்பு

 

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் நிராகரிப்பு

இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் தமிழர் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் போராடின. சில அகிம்சை ரீதியாகவும் சில ஆயுதக் குழுக்களாகவும். ஆயுதக்குழுக்களில் முதன்மையாக இருந்தது விடுதலைப் புலிகள்.

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட, இந்தியாவிலிருந்து அமைதிப் படை சென்றிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த திலீபன், இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேறச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தார். 12 நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் திலீபன்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் நிராகரிப்பு

அவரின் நினைவேந்தலுக்கு இலங்கை காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன் செஞ்சோலை நினைவஞ்சலிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் திலீபன் குறித்து, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.  ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிபதி, ‘திலீபன் உள்ளிட்ட அனைத்து நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கும்படி ஜனாதிபதியிடன் தமிழ்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கிறது’ என்றார். மேலும், ‘இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினர் பேசி, கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் நிராகரிப்பு

இந்நிலையில் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் திலீபன் நினைவேந்தலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை முன்னிருத்தி இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சிறப்பு கோரிக்கையை வைத்தார்.

ஆனால், சபாநாயகர், அந்தக் கோரிக்கையில் சில இடங்கள் நீதி மன்ற வழக்குடன் தொடர்பு இருப்பதால் அதை சபையில் படிக்க அனுமதிக்க முடியாது என்று நிராகரித்து விட்டார்.

இதனால், இலங்கை பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும் காரசாரமான வாதங்கள் நடைபெற்றன.