மனைவியுடன் “ஸ்ட்ரீட் கிரிக்கெட்” விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மும்பையிலிருக்கும் தனது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மும்பையிலிருக்கும் தனது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் உலகம் முழுவதும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும், தொடர்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ஓய்வு நேரத்தில் தனது மனைவி அனுஷ்காவுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Finally after soo much long time saw Virat Batting ?
Virat Anushka playing cricket in building today?
Anushka bowls a Bouncer to Virat?#ViratKohli #AnushkaSharma #Cricket pic.twitter.com/XFmfs3hiBt— Virarsh (@Cheeku218) May 15, 2020
கோலி முதலில் பந்துவீச அனுஷ்கா சர்மா பேட்டிங் ஆடுகிறார். பின்னர், பேட்டை ஆர்வத்துடன் வந்து வாங்கிகொண்டு கோலி பேட்டிங் செய்தார். இந்த வீடியோவை அருகில் இருக்கும் வீட்டின் மாடியில் இருந்து படம்பிடித்த சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் இதுதான் விராட் கோலியின் வீடா, மைதானத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என்றும், மிகச்சிறிய வீடாக இருக்கிறதே என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.