இலங்கை lpl போட்டி – நாட்டுக்குத் திரும்பிய முக்கிய வீரர்

 

இலங்கை lpl போட்டி – நாட்டுக்குத் திரும்பிய முக்கிய வீரர்

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைப்போலவே, இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இலங்கை lpl போட்டி – நாட்டுக்குத் திரும்பிய முக்கிய வீரர்

இந்நிலையில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாயித் அப்ரிடி. அவர் தற்போது தனது சொந்த வேலைகளால் தாய்நாட்டுக்குத் திரும்பி விட்டார்.

அப்ரிடி அணியில் இணைந்ததே தாமதமாகத்தான். சென்ற திங்கள்கிழமை பாகிஸ்தானிலிருந்து புறப்பட வேண்டியவர், விமானத்தைத் தவற விட்டதால், புதன் கிழமைதான் இலங்கை வந்தார். அடுத்த நாளே போட்டியில் அப்ரிடி ஆடியதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இலங்கை lpl போட்டி – நாட்டுக்குத் திரும்பிய முக்கிய வீரர்

இந்நிலையில் பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அப்ரிடி தொடரிலிருந்து விலகுகிறாரா… அல்லது சில நாட்களில் மீண்டும் தொடரில் இணைந்துகொள்வாரா என்ற தகவல் தெரிவிக்கப்பட வில்லை.