CSK அணியிலிருந்து 3 வீரர்கள் நீக்கம்! யார் யார் முழுவிபரம்!

 

CSK அணியிலிருந்து 3 வீரர்கள் நீக்கம்! யார் யார் முழுவிபரம்!

இப்போதுதான் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து ஆஸ்திரேலியா டூர் சென்றிருக்கிறார்கள் இந்திய அணி வீரர்கள். சென்ற ஆண்டு கொரோனாவால் ஐபிஎல் தள்ளிப் போனதால், இந்த ஆண்டு வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அணிகள் செய்யத் தொடங்கி விட்டன.

ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியிலிருந்து ஒரே கேப்டனைக் கொண்டிருக்கும் ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அவர் மகேந்திர சிங் தோனி.

CSK அணியிலிருந்து 3 வீரர்கள் நீக்கம்! யார் யார் முழுவிபரம்!

2020 ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், அது எந்த ஆண்டிலும் இல்லாத அளவு பிளே ஆப் சுற்றுக்கே தகுதி பெற வில்லை. ஐபிஎல் பாயிண்ட் டேபிளி பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்துள்ளது.

CSK வின் தொடர் தோல்விக்கு தோனியின் சில முடிவுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றும் சிலரோ, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற கீ பிளேயர்ஸ் இல்லாமல் என்னதான் செய்வார் என்று தோனியின் பக்கம் உள்ள நியாயத்தைக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் CSK அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது சுத்தமாக ஃபார்ம் அவுட்டில் இருந்த கேதார் ஜாதவ். அதனால், இரு போட்டிகள் வெல்ல வேண்டியது தவறிபோனது. அதனால், அணியிலிருந்து நீக்கும் பட்டியலில் முதல் பெயர் அவருடையதுதான். அவருடன் பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

CSK அணியிலிருந்து 3 வீரர்கள் நீக்கம்! யார் யார் முழுவிபரம்!



இந்த மூவர் மட்டுமில்லாது இன்னும் சிலர் விடுவிக்கப்படலாம். இம்முறை சொந்த காரணங்களால் அணியிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னாவை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்றே சொல்லப்பட்டது. இந்த மாற்றங்களால் புதிய வீரர்கள் அதிலும் வெளிநாட்டு வீரர்கள் பெறலாம்.

தோனிதான் கேப்டன் என்று சென்ற சீசன்போதே அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அதில் மாற்றம் ஏதுமிருக்காது என்றே தெரிகிறது.