இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. 8 விக்கெட் இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா..!

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. 8 விக்கெட் இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா..!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆன் செய்துவரும் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுக்களை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் தருவாயில் இருக்கிறது.

ராஞ்சியில் நடைபெற்றுவரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களுக்குள் சுருண்டது. 

india

335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை பாலோ-ஆன் செய்யுமாறு பணித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க வீரர் டி காக் இம்முறையும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். 

முதல் இன்னிங்சில் அரைசதம் கண்ட அறிமுக வீரர் ஹம்சா இம்முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டு ப்லஸ்ஸிஸ் 4 ரன்களுக்கும், பவுமா ரன் ஏதும் எடுக்காமலும், கிளாஸன் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் டெஸ்டில் மீண்டும் ஒரு முறை ஆட்டம் கண்டது. 

india

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் லிண்டே (27), பீட் (23), ரபாடா (12) ஆகியோர்களின் விக்கெட்டுக்களை எடுக்க 121 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி போட்டியை வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாம் நாளில் இன்னும் சில ஓவர்கள் மீதமிருக்க, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை பெறும் தருவாயில் இருக்கிறது. தற்போது வரை இந்திய அணி 203 ரன்கள் முன்னிலை பெற்று கம்பீரமாக உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் சமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

-vicky