பிறந்தநாளில் சதம் அடித்த கோலி! தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா

 
விராட் கோலி

உலகக் கோப்பை தொடரின் 37 வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

இந்தியா

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினார். இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் தென் ஆப்பிரிக்கா அணியின் மேக்ரோ யான்சனை அடித்து தென் ஆப்பிரிக்கா அணியின் நம்பிக்கையை குலைத்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் திரட்டினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கில் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு நட்சத்திர ஆட்டக்காரர் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தனர். பொறுமையாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.பொறுப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய கோலி தனது பிறந்த நாளான இன்று சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டிகளில் கோலி அடிக்கும் 49வது சதம் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. கோலி 101 ரன்களுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Image

327 என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மன்களை ஜடேஜா,சிராஜ்,சமி கூட்டணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுத்து வெளியேற்றினர். சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.27.1 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.